Home / உலகச் செய்திகள் / மனிதர்கள் போல் பேசும் காகம்..

மனிதர்கள் போல் பேசும் காகம்..

இங்கிலாந்து நாட்டில் மனிதர்கள் போல் ஒரு காகம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக பறவைகளில் கிளி மட்டுமே பேசும் திறன் கொண்டது என்பது இதுவரை நமக்கு தெரிந்த ஒன்று. ஆனால், தற்போது அது பொய்யாகி உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள கனரஸ்பாரோ என்கிற பகுதியில் உள்ள ஒரு கோட்டையில் லிசா-மார்க் புரூஸ் தம்பதி அமர்ந்திருந்த போது அங்கு வந்த காகம் மனிதர்கள் போல் பேசியுள்ளது.

அதாவது, ‘யூ ஆல்ரைட் லவ்’ என கேட்க, அந்த காகவும் ‘யூ ஆல்ரைட்?’ என பல முறை திருப்பிக் கேட்டது.

இந்த வீடியோவை மார்க் புரூக்ஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்ட சில நிமிடங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

About இனியவன்

x

Check Also

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துர மதூஷின் சொத்து விபரம் வெளியானது!!

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள, மாக்கந்துர மதூஷின் அனைத்து வங்கி கணக்குகளும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரினால் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு  டுபாய் ...

%d bloggers like this: