Home / உள்நாட்டு செய்திகள் / மதுபான விற்பனைக்கான அனுமதியினை இணைய தளத்தின் ஊடாக பெற முடியும்!

மதுபான விற்பனைக்கான அனுமதியினை இணைய தளத்தின் ஊடாக பெற முடியும்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபான விற்பனைக்கான அனுமதியினை இணைய தளத்தின் ஊடாக பெறுவதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியினையும் இணைய தளத்தின் ஊடாக புதுப்பிக்க முடியும் எனவும் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மதுபான வகைகளை இடத்திற்கு இடம் எடுத்துச் செல்வதற்கும், அவற்றை களஞ்சியப்படுத்துவதற்கும், விருந்து உபசாரங்களுக்காக 7.5 லீட்டர் மதுபான வகைகளை உபயோகிப்பதற்குமான அனுமதியினையும் இணைய தளத்தின் ஊடாக பெற முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

About அகமுகிலன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: