Home / உலகச் செய்திகள் / மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு இந்திய திரைப்பட நடிகர் விவேக் விஜயம்!!

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு இந்திய திரைப்பட நடிகர் விவேக் விஜயம்!!

இந்திய திரைப்பட நடிகர் விவேக்  மட்டக்களப்பு காந்தி பூங்கா மற்றும் மட்டு மாநகரசபைக்கு  இன்று புதன்கிழமை விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றைய முன்தினம்  நடைபெற்ற சுவாமி விபுலானந்தரின் 125 ஆவது ஆண்டு விழாவிற்கு கலந்துகொண்ட நடிகர் விவேக்கை மாநகரசபக்கு வருமாறு மேயர் தி. சரவணபாவனின் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை மட்டு நகரிலுள்ள காந்தி பூங்காவிற்கு வருகை தந்த நடிகர் விவேக்கை மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார், மட்டு மாநகரசப  மேயர் ரி.சரவணபவான் தலைமையில் மாநகரசபை உறுப்பினர்கள் வரவேற்றார்கள்.

அதனைத் தொடர்ந்து நடிகர் விவேக்  அங்கு உள்ள  மகாத்மா காந்தி உருவச் சிலைக்கு மலர் மாலை அணிந்து மரியாதை செலுத்தியதையடுத்து தனது வருகையின் நினைவாக மரக்கன்றை நாட்டிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து நீருற்று பூங்காவிலுள்ள சுவாமி விபுலானந்தரின் திரு உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் மாநகரசபக்கு சென்றார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

கஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு!!

இந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் ...

%d bloggers like this: