Home / உள்நாட்டு செய்திகள் / மட்டக்களப்புபில் 1488 பேர் மீது சட்ட நடவடிக்கை!

மட்டக்களப்புபில் 1488 பேர் மீது சட்ட நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டின் துவக்கத்திலிருந்து தற்போது வரை போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக 1488 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போதைப்பொருள் தடுப்பு செயலணியின் மாவட்ட மட்ட கூட்டம்  நேற்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பணிமனையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது.

மதுவரி திணைக்கள சமூக சீர்திருத்த பிரிவினர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்  கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி கே. அருளானந்தம் வைத்திய கலாநிதி கே. அருள்யோதி வலய கல்வி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரஐணி உதயாகரன் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்; உட்பட பல அதிகாரிகளும் பலரும் கலந்து கொண்டனர்.

அங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள்மாவட்டத்தில் தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருவதாக அதிலும் பாடசாலை மாணவப்பருவத்தினர்தான் குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டு வருவதும் அவதாநிக்க கூடியதாக உள்ளது.

அதிலும் 13வயது முதல் 17வயதினர் தான் தங்களுக்கு போதிய விழிப்புணர்வு பெற்றோரின் கண்காணிப்பின்றி வழிதவறுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரி முதல் இன்று வரையும் ஹெரோயின் வைத்திருந்த குற்றத்திற்காக 190 பேரும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 28 பேரும் கஞ்சா வைத்திருந்த 245 பேரும் கோடா வைத்திருந்த குற்றத்திற்காக 155 பேரும் கசிப்பு உற்பத்தியிலும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என 870 பேரும் மொத்தம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1488 பேருக்கெதிராக போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கிழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் இருந்து போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையினை ஆரம்பிப்பதற்கும் அதிலும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் முதல் முறையாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டது.

About VITHUSHA

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...