Home / இந்திய செய்திகள் / மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி நினைவிடத்தில் மோடி, தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி நினைவிடத்தில் மோடி, தலைவர்கள் மரியாதை

புதுடில்லி : மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, பா.ஜ., செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து விஜய்கோட்டில் உள்ள முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் சோனியா, மன்மோகன் சிங் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “காந்தியின் 150வது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். மனித குலத்திற்கு அவர் அளித்த மிகப் பெரிய பங்களிப்பை நாம் நினைவு கூற வேண்டும். அவரது கனவை நினைவாக்க கடுமையாக உழைப்பதுடன், சிறப்பான பூமியை உருவாக்க இந்நாளில் உறுதி ஏற்க வேண்டும்”. இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் டுவீட் செய்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மருத்துவ கல்வி நிறுவனங்களில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி, பிரதமர் ...

%d bloggers like this: