Home / உள்நாட்டு செய்திகள் / போலி கனேடிய டொலர்களுடன் இருவர் யாழில் கைது..!

போலி கனேடிய டொலர்களுடன் இருவர் யாழில் கைது..!

யாழ்ப்பாணத்தில் உள்ள நாணய மாற்று நிலையத்தில் 10,100 போலி கனேடியன் டொலர்களை மாற்றுவதற்கு முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.நகரில் உள்ள நாணய மாற்று நிலையம் ஒன்றுக்கு இளைஞர் ஒருவர் 10,100 போலி கனேடியன் டொலர்களை மாற்றுவதற்கு கொண்டு சென்றுள்ளார்.

நாணய மாற்று சேவை பிரிவில் உள்ள இளைஞரினால் கனேடியன் டொலர்கள் அனைத்தும் போலி என கண்டுபிடித்து யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற புலனாய்வுப் பிரிவினர், நாணயம் மாற்றுவதற்கு வந்த இளைஞரை கைது செய்ததுடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, சித்தன்கேணிப் பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் போலி நாணயங்களை மாற்றிக்கொண்டு வருமாறு தந்ததாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சித்தன்கேணிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகரும் போலி நாணயங்களை மாற்ற வந்த நபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

விசாரணையின் பின்னர் யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், குறித்த 10,100 போலி கனேடியன் டொலரும் இலங்கை ரூபாவின் மதிப்பின்படி பல இலட்சம் ரூபா என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

About கலைப்பிரியன்

x

Check Also

கோட்டாபய நாளை காலை அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம்

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் ...

%d bloggers like this: