Home / உலகச் செய்திகள் / போலியான மலேசிய கடவுச் சீட்டுகளை பயன்படுத்தி ஆட்கடத்தல்களில் ஈடுபட்டு வந்த குழு கைது!!

போலியான மலேசிய கடவுச் சீட்டுகளை பயன்படுத்தி ஆட்கடத்தல்களில் ஈடுபட்டு வந்த குழு கைது!!

போலியான மலேசிய கடவுச் சீட்டுகளை பயன்படுத்தி இலங்கையர்களை ஆட்கடத்தலுக்கு உட்படுத்தி வந்த குழு ஒன்றை கைது செய்திருப்பதாக, மலேசியாவின் காவற்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

மலேசிய காவற்துறை மா அதிபர் டட்டக் செரி அப்துல் ஹமீட் பதூர் இன்று இதனை செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 30ம் திகதி கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமாக போலி கடவுச் சீட்டுடன் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்ல முற்பட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகிறார்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அதே தினத்தில் மேலும் மூன்று இலங்கையர்களுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து கடந்த மே மாதம் 2ம் திகதி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 11 பேருக்கு எதிராகவும் மலேசியாவின் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மலேசியாவில் நீண்டகாலமாக சட்டவிரோத ஆட்கடத்தல்களில் ஈடுபட்டுவந்த குழு ஒன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலக அளவில், அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து காமி ரிடா செர்பா சாதனை!!

உலக அளவில், அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை தொட்டவர் எனும் பெருமையை கிழக்கு நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் பெற்றுள்ளார். ...

%d bloggers like this: