Home / உள்நாட்டு செய்திகள் / போலியாக தயாரிக்கப்பட்ட 54 சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் ஒருவர் கைது!!

போலியாக தயாரிக்கப்பட்ட 54 சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் ஒருவர் கைது!!

போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து விநியோகித்து வந்த குற்றச்சாட்டில் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு  கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜகிரிய, மொரவிட்டியா வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சந்தேக நபரிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட 54 சாரதி அனுமதிப்பத்திரங்கள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் பொருட்டு, திட்டமிடப்பட்ட குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: