Home / சினிமா செய்திகள் / போராட்டம் வலுத்து தெருவுக்கு வரும் திரையுலகம்.

போராட்டம் வலுத்து தெருவுக்கு வரும் திரையுலகம்.

கடந்த மார்ச் முதல் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம், புதிய திரைப்படங்கள் வெளிவராது என அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரு மாதம் ஆகியிருக்கும் நிலையில்,பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்கவில்லை.

இந்நிலையில்,தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை புதிய திரைபடங்கள் வெளிவராது, போராட்டம் தொடரும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இணைந்து அறிவித்தனர்.

இதுமட்டுமின்றி வரும் புதன்கிழமை திரையுலகினர் கலந்துகொள்ளும் பிரமாண்ட பேரணி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். பேரணியாகச் சென்று முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிப்போம் எனத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

 

About இனியவன்

x

Check Also

ஷாப்பிங் மாலில் கீழே விழுந்த கஜோல் (வீடியோ)

மும்பையில் ஷாப்பிங் மாலில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது நடிகை கஜோல் கால் இடறி விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடை ...

%d bloggers like this: