Home / உலகச் செய்திகள் / போராட்டத்தில் பங்கேற்ற ஈரானுக்கான பிரிட்டன் தூதர் கைது RADIOTAMIZHA

போராட்டத்தில் பங்கேற்ற ஈரானுக்கான பிரிட்டன் தூதர் கைது RADIOTAMIZHA

ஈரானில் அந்நாட்டு அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பிரிட்டன் தூதர் கைது செய்யப்பட்டதற்கு பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் ஒப்புக் கொண்டது. இதனைக் கண்டித்து டெஹ்ரானில் உள்ள அமீர் கபீர் பல்கலைகழகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில், ஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மேக்கைர் பங்கேற்றார்.

போராட்டக்காரர்களுடன் சேர்த்து பிரிட்டன் தூதரையும் கைது செய்த பாதுகாப்பு படையினர், சில மணி நேரங்களுக்கு பின்னர் விடுவித்தனர். இதற்கு கண்டனம் தெர்வித்துள்ள பிரிட்டன் அரசு, ஈரான் பகிரங்கமாக சர்வதேச விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலகப் புகழ்­பெற்ற பாடகி அருள்­பி­ர­கா­சத்­துக்கு பிரிட்டனின் MBE விருது!! RADIOTAMIZHA

உலகப் புகழ்­பெற்ற பாடகி எம்.ஐ.ஏ. எனும் மாதங்கி மாயா அருள்­பி­ர­கா­சத்­துக்கு (MIA) பிரித்தானிய சாம்ராஜ்­யத்தின் அங்­கத்­த­வ­ருக்­கான எம்.பி.ஈ (Member of ...

%d bloggers like this: