Home / உள்நாட்டு செய்திகள் / போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்கு சென்ற 17 பேர் கைது!!

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்கு சென்ற 17 பேர் கைது!!

சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்காக சென்ற 17 பேர் போதைப்பொருட்களுடன் ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இரவு ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யபட்டவர்களிடம் இருந்து கேரள கஞ்சா, ஜஸ் மெதன் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள், கொழும்பு, காலி, மாத்தறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் காவற்துறையினர்  மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

 

About அகமுகிலன்

x

Check Also

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 13ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு..!!

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மற்றுமொரு கலந்துரையாடலை இந்த வாரம் நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ...

%d bloggers like this: