Home / இந்திய செய்திகள் / பொள்ளாச்சி வெறி நாய்கள் மீது நடவடிக்கை எப்போது?

பொள்ளாச்சி வெறி நாய்கள் மீது நடவடிக்கை எப்போது?

பொள்ளாச்சியில் முகநூலில் நட்பாகி, ஏராளமான பெண்களை மிரட்டி வீடியோ எடுத்ததாக பிடிபட்ட இளைஞர்களே ஒப்புக் கொண்ட நிலையில், 4 வீடியோக்கள் மட்டுமே தங்களிடம் கிடைத்திருப்பதாகவும், பாலியல் பலாத்காரம் என்று எந்த பெண்ணும் புகார் அளிக்கவில்லை எனவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அளித்துள்ள பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களிடம் முகநூலில் நட்பாக பேசி, காதல் வலையில் வீழ்த்திய திருநாவுக்கரசு, ஆபாச வீடியோ எடுத்த கூட்டாளி சபரிராஜன் என்கிற ரிஸ்வந்த் ஆகியோரின் கும்பல் பல பெண்களின் வாழ்க்கையோடு விளையாடிய கொடுமை குறித்து நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த்குமார், சதீஷ் ஆகியோரை போலீசிடம் பிடித்து கொடுத்த நிலையில், முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு மட்டும் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டுகிறது. அதுவும் 3 பேர் மீது முதலில் சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தது காவல்துறை.

தலைமறைவான திருநாவுக்கரசு, முதலில் ஆடியோ வெளியிட்டார்… பின்னர் அரசியல் தலையீடு இருப்பதாக வீடியோ வெளியிட்டதால், வேகவேகமாக கைது செய்யப்பட்டார்

இந்த பிளாக்மெயில் கும்பலை நம்பி, திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டுக்கு சென்ற ஏராளமான இளம் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் அத்துமீறல் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், GFX1 out இந்த கும்பலிடம் சிக்கிய ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையான பதை பதைக்க வைக்கும் அபயக்குரல் தான் இது..!

இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்ததும், முதல்முறையாக திமுக வழக்கறிஞர்களும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் கொங்கு ஈஸ்வரனும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதற்கிடையே அத்துமீறல் கொடுமையை துணிச்சலுடன் வெளிக்கொண்டுவந்த, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை, பார் நாகராஜன் என்பவர் தலைமையிலான 4 பேர் கும்பல் தாக்கியது. போலீசாரால் தாக்கப்பட்ட 4 பேரும் எளிதாக பிணையில் வெளியே வந்ததால் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

கட்சியின் பெயருக்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி பார் நாகராஜன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து முக்கிய அரசியல் கட்சியினரின் தலையீடு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்களில் பரவியது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், பா.ம.க. அன்புமணி , திருமாவளவன், உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த குற்றச் சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில் விவகாரம் பெரிதானதால், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ,செய்தியாளர்களை சந்தித்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரு வரியில் சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனிடம் சிக்கிய போது, குற்றம் சட்டப்பட்ட திருநாவுக்கரசுவும், சபரிராஜனும் நிறைய பெண்களை வீடியோ எடுத்திருக்கிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆனால் எஸ்.பி பாண்டியராஜன், 4 வீடியோக்கள் மட்டுமே செல்போனில் இருந்ததாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் உள்ள பெண்ணின் அபயக்குரல் காண்போரை குலை நடுங்கச்செய்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

ஆனால் எந்த பெண்ணும் பாலியல் பலாத்காரம் நடந்ததாக புகார் தரவில்லை அதனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது பலாத்கார வழக்கு ஏதும் பதியப்படவில்லை என்கிறார் எஸ்.பி பாண்டியராஜன்.

பாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளத்தை மறைக்கும் விதமாக பெண்ணின் பெயரையோ, அவரது உறவினர்களின் பெயரையோ வெளியிடக்கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பெயரை வெளியிட்டது காவல்துறையின் தவறு என்று ஒரு கட்டத்தில் தவறை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் பாண்டியராஜன்.

பெண்ணின் பெயரை வெளியிட்டு மேற்கொண்டு எந்த ஒரு பெண்ணும் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்ல இயலாதபடி செய்த காவல் துறையினர் மீது என்ன விதமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில், மதுக்கடை வேண்டாம் என்று சாலையில் நின்று போராடியதற்கே பெண் என்றும் பாராமல் கன்னத்தில் அறைந்து விரட்டியவர் கோவை எஸ்.பி பாண்டியராஜன்.

அப்படியானால் இப்படிப்பட்ட கொடூரர்கள் மீது எத்தனை கடுமை காட்டியிருக்க வேண்டும்..! ஏன் காட்டவில்லை என்ற கேள்வியும் எழுகிறது..!

கடந்த 2010 ஆம் ஆண்டு கோவையில் இரு குழந்தைகளை கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொலை செய்த முக்கிய குற்றவாளி போலீசாரிடம் தப்ப முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த அளவிற்கு பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது அன்றைய காவல்துறை,

அதே நேரத்தில் வெகுஜன மக்களிடம் பெரும் தாக்கத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி கூட்டு பாலியல் அத்துமீறல் வழக்கை இன்றைய காவல்துறையினர் எவ்வாறு கையாளப் போகின்றனர் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

வைகாசி விசாகத் திருவிழாவில் குவிந்த ஏராளமான பக்தர்கள்!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் ...

%d bloggers like this: