Home / உள்நாட்டு செய்திகள் / பொலிஸாருக்கு கிடைத்த கௌரவம்!

பொலிஸாருக்கு கிடைத்த கௌரவம்!

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தில் குற்றம், குற்றவியல் சட்டங்கள் மற்றும் கஞ்சா கடத்தல்களை முறியடித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் கடந்த மூன்று மாதங்களில் சிறப்பாக செயற்பட்ட பொலிசாரை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (28.03.2018) இடம்பெற்றது.

மூன்று மாதத்தில் வவுனியா மாவட்டத்தில் குற்றங்களை குறைக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும், போதைவஸ்து ஒழிப்பு நடவடிக்கை மற்றும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைது செய்தமை, விபத்துக்களை தடுப்பதற்கு சிறப்பாக பணியாற்றிய போக்குவரத்து பொலிஸ் பிரிவினருக்கும், வவுனியா பொலிஸ் பிரிவில் அகில இலங்கை ரீதியில் விளையாட்டுக்களில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட 81 பொலிசாருக்கு ஊக்குவிப்பு விருதுகளும் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட பரிசுத்தொகையும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரட்ன விதானபத்ரன, வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், , உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் எம்.எஸ்.ஜானக மற்றும் வவுனியா, மன்னார் மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் போன்ற பலரும் கலந்து கொண்டனர்.

இவ் நிகழ்ச்சிக்கு உற்சாகத்தை வழங்க முன்பள்ளி குழந்தைகளின் நடன நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

 

About இனியவன்

x

Check Also

யாழ் காரைநகர் கும்பநாயகி அம்மன் ஆலயக் கொடியேற்றம் இன்று ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு கும்பநாயகி அம்மன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் ...

%d bloggers like this: