Home / உள்நாட்டு செய்திகள் / போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!!

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!!

கடற்படையினர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து 2019 ஜூன் 14 திருகோணமலை லிங்கநகர் பகுதியில் மேற்கொண்ட  சுற்றி வளைப்பின் போது போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இனைந்து லிங்கநகர் பகுதியில் மேற்கொண்ட  சுற்றி வளைப்பின் போது ப்ரிகெசிம் (Pregazim) 130 போதை மாத்திரங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த போதை மாத்திரங்கள் சட்டவிரோதமாக விநியோகிக்க ஒரு மோட்டார் சைக்கிளை மூலம் கொண்டு செல்லும் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் 26 மற்றும் 30 வயதிற்குட்பட்ட திருகோணமலை பிரதேசத்தில் வசிப்பவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் மற்றும் போதை மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

மரண தண்டனை தொடர்பில் மகிந்தவின் தெரிவித்துள்ள கருத்து..!!

மரண தண்டனை அவ்வாறே பேணப்படும் என்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ...

%d bloggers like this: