Home / உலகச் செய்திகள் / பேஸ்புக் நிறுவனம் நீக்கியும், ஒரே நாளில் 15 லட்சம் முறை பார்த்த வீடியோ!!

பேஸ்புக் நிறுவனம் நீக்கியும், ஒரே நாளில் 15 லட்சம் முறை பார்த்த வீடியோ!!

நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூட்டின் போது எடுக்கப்பட்ட வீடியோவை சில நிமிடங்களில் பேஸ்புக் நிறுவனம் நீக்கியும், தீவிரவாத ஆதரவுக் குழு ஒன்று உலகம் முழுவதும் அதனைப் பரப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

50 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட  நேரலையை 200 பேர் மட்டுமே பேஸ்புக்கில் பார்த்துள்ளனர். வீடியோ பதிவேற்றப்பட்ட 29 நிமிடங்களில், 4 ஆயிரம் முறை மட்டுமே பார்க்கப்பட்டிருந்த நிலையில் பயனாளர் ஒருவர் அந்த வீடியோ குறித்து புகார் அளித்ததால் உடனடியாக நீக்கியதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு முன்பே அதனை பதிவிறக்கம் செய்த 8சன் 8chan என்ற வலதுசாரி தீவிரவாத ஆதரவுக் குழு ஒன்று பிராக்சி தளங்கள் மூலமாக மீண்டும் பதிவேற்றி பரப்பியதாகக் கூறியுள்ளது.

தானியங்கி செயலிகள் மூலம் தடுத்து போது அதில் சிக்காமலிருக்க அந்த வீடியோவை எடிட் செய்து மீண்டும் பதிவேற்றி பரப்பியதாகவும், இதன் மூலம் எவ்வளவு தடுத்தும் 24 மணி நேரத்தில் 15 லட்சம் முறை வன்முறை வீடியோ பார்க்கப்பட்டதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு!!

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பாறை மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ...

%d bloggers like this: