Home / தொழில்நுட்ப செய்திகள் / பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள டேட்டிங் சேவை!!

பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள டேட்டிங் சேவை!!

அமெரிக்கா உள்பட 20 நாடுகளில் ஃபேஸ்புக் நிறுவனம் டேட்டிங் என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

டிண்டர் போன்ற ஆன்லைன் டேட்டிங் ஆப்-ஐ போல் ஏற்கெனவே வைத்துள்ள கணக்கிலோ, புதிய கணக்கு தொடங்கியோ இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்ப இணையைத் தேர்ந்தெடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் விளக்கமளித்துள்ளது. பாதுகாப்பு அம்சமாக நிகழ்நேர வரைபட பின்தொடர்பு போன்ற டேட்டிங் தகவலை மெசெஞ்சர் மூலம் நண்பர்களுக்கு அனுப்பிக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

டேட்டிங் சேவையில் இணைந்த நண்பரையோ, அல்லது பின்தொடர்பாளர்களில் யாரேனும் ஒருவரையோ சீக்ரெட் கிரஸ் என்ற பெயரில் உள்ள பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்.

யாரோ ஒருவர் கிரஷ் என்ற பெயரில் இணைத்துள்ளதாக அவருக்கு அறிவிக்கை மட்டுமே தெரியவரும். டேட்டிங் சேவையிலும் ஸ்டோரி என்ற பெயரில் ஸ்டேட்டஸ் பகிரும் வசதி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த வசதி அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, ஈக்வடார், கயானா ( Guyana), லாவோஸ், மலேசியா, மெக்சிகோ, பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சுரினாம், (Suriname)தாய்லாந்து, உருகுவே, வியட்னாம் மற்றும் அமெரிக்கா ஆகிய 20 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிற நாடுகளுக்கு 2020-ன் தொடக்கத்தில் அமலுக்கு வரும் எனவும் ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

டுவிட்டர் நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு!!

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் என்பவற்றின் ஊடாக வன்முறைகளை தூண்டக்கூடிய பல கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. இவற்றில் சமயங்களை அடிப்படையாகக் ...

%d bloggers like this: