Home / உலகச் செய்திகள் / பேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும் வித்தியாசமான நடைமுறை..!!

பேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும் வித்தியாசமான நடைமுறை..!!

இந்தோனேஷியாவில், பேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும் வித்தியாசமான நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. உலகளவில் ஆண்டு தோறும் சுமார் 8 மில்லியன் டன் குப்பைகள் கடலில் சேகரமாகின்றது.

கடல் சுற்றுசூழல் மாசு ஏற்படுத்தும் நாடுகளில், சீனாவுக்கு அடுத்தப்படியாக, இந்தோனேஷியா இருந்து வரும் நிலையில், வருகிற 2025ம் ஆண்டுக்குள், கடலில் சேகரமாகும் 70 சதவீதம் குப்பைகளை குறைக்க இந்தோனேஷியா முடிவு செய்துள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அதற்கு ஏற்ப அந்நாட்டு அரசு, மக்களிடம் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனுடன் ‘சுராபயா’ என்ற திட்டத்தின் கீழ் அரசு தற்போது அரசு பேருந்துகளை பயன்படுத்தியும், குப்பைகளை சேகரிக்கின்றது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அந்தவகையில் சுராபயா நகரில் பேருந்து கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்ளும் பயணிகள், தாங்கள் கொண்டு வரும் குப்பைகளை, டிக்கெட் வழங்கும் அதிகாரியிடம் கொடுத்துவிட்டு, விரும்பும் இடங்களுக்கு பயணிக்கலாம்.

இந்த குப்பைகள் பின்னர் ஒட்டுமொத்தமாக, மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துக்கு ஏலம் விடப்படுகின்றது.
அரசின் இந்த புதிய முயற்சி வெற்றிப்பெற்று வருவதாக தெரிவிக்கும் போக்குவரத்து அதிகாரிகள், இதற்கென மக்கள் சொந்த வாகனங்களை விடுத்து அரசு பேருந்துகளை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் ...

%d bloggers like this: