Home / உலகச் செய்திகள் / பேருந்து தீப்பற்றி 20 பேர் உடல் கருகி பலி!

பேருந்து தீப்பற்றி 20 பேர் உடல் கருகி பலி!

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே 20 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

தாய்லாந்தின் மேற்கு பகுதியில் மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள தாக் மாகாணத்தில் இருந்து தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.

தலைநகர் பாங்காங் அருகே உள்ள தொழிற்சாலைக்கு பயணிகள் சென்று கொண்டு இருந்த போது உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் பேருந்தில் திடீரென தீ பிடித்தது.

பேருந்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவத் தொடங்கியது. இதில் பேருந்தில் இருந்த தொழிலாலர்கள் அலறி அடித்தபடி பேருந்தை விட்டு வெளியேற முயற்சித்தனர்.

27 பேர் பேருந்தில் இருந்து வெளியேறிவிட்ட போதிலும் பின்பகுதியில் அமர்ந்திருந்த 20 பேர் தீ விபத்தில் சிக்கி உடல் கருகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாய்லாந்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

About இனியவன்

x

Check Also

ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் – 93 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் மோசூல் நகரம் அருகே ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. ஈராக் நாட்டின் ...

%d bloggers like this: