Home / உலகச் செய்திகள் / பேருந்து குடைசாய்ந்து 50 பேர் பலி! (படங்கள்)

பேருந்து குடைசாய்ந்து 50 பேர் பலி! (படங்கள்)

பேருந்து குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் கென்யாவில் இடம்பெற்றுள்ளது.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து மேற்கு பகுதியிலுள்ள காகமேகா நோக்கிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து கெரிச்சோ கவுண்டி பகுதியால் சென்றுகொண்டிருந்த போது வீதியை விட்டு விலகி திடீரென கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து இடம்பெறும் போது குறித்த பேருந்தில் 52 க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ள நிலையில் 50 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

ஆஃபிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் கடத்தல்

ஆஃபிரிக்காவில் இளம் கோடீஸ்வரர் என்று கூறப்பட்ட மொஹமத் டஹ்ஜி, முகமூடி அணிந்த துப்பாக்கிதாரி ஒருவரால் டான்சானியாவின் முக்கிய நகரமான டர் ...

%d bloggers like this: