Home / உள்நாட்டு செய்திகள் / பேருந்திலிருந்து இறங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

பேருந்திலிருந்து இறங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

பேருந்திலிருண்டு இறங்கிச் செல்ல முற்பட்ட பெண் அதே பேருந்திலேயே அடிபட்டு சாவடைந்த பரிதாபச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தின் வெலிமடை பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான குறித்த பேருந்திலிருந்து இறங்கிய பெண் அதன் முன் பக்கமாகச் சென்றுள்ளார். பேருந்து சிறிது நேரம் தரித்திருக்கும் என்ற நம்பிக்கையில் அந்தப் பேருந்தை குறித்த பெண் கடந்தபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குறித்த பெண் கடந்து செல்வதற்கிடையில் பேருந்து திடீரென இயக்கப்பட்டதனால் அதனுடன் மோதிய பெண் கீழே விழுந்ததுடன் ஓட்டுநர் பக்கமுள்ள முன் சில்லு அவர் மீது ஏறியது.

இதனால் படுகாயமடைந்த நிலையில் வெலிமடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் பலகல – வெருல்லஹின்ன பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான வாரணதுரலாகே இந்திரா என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மற்றும் பேருந்தின் நடத்துநர் ஆகியோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

About இனியவன்

x

Check Also

இலங்கையில் இன்று பாராளுமன்றத்தில் நடந்தது என்ன..?

பாராளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கூடவிருந்த நிலையில், சபாபீடத்தில் ஆளுந்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் ...

%d bloggers like this: