Home / உள்நாட்டு செய்திகள் / பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மட்டக்களப்புக்கு விஜயம்!!

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மட்டக்களப்புக்கு விஜயம்!!

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் அருட்திரு மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இன்று காலை மட்டக்களப்பு ஆயர் இல்லத்திற்கு சென்று அங்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினை சந்தித்து கலந்துரையாடினார்.

கடந்த ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்திற்கும் விஜயம் செய்த பேராயர் அங்கு புனரமைக்கப்பட்டுவரும் ஆலயத்தினை பார்வையிட்டார்.

இதன்போது குறித்த தேவாலய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனைகளிலும் பேராயர் ஈடுபட்டார்.

மேலும் இந்த விஜயத்தின்போது இராணுவ அதிகாரிகள், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை உட்பட பலர் இணைந்திருந்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: