Home / இந்திய செய்திகள் / பெங்களூருக்கு வருகை தரும் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

பெங்களூருக்கு வருகை தரும் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

தி இந்து பத்திரிக்கை பெங்களூரில் நடைபெறும் தனது கருத்தரங்கிற்கு இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அழைத்திருப்பதைக் கண்டித்து  மே பதினேழு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பெங்களூர் ஃப்ரீடம் பார்க் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் துவங்கியது. தமிழர் விரோத தி இந்து பத்திரிக்கையைக் கண்டித்தும், ராஜபக்சேவைக்  கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னரே அனுமதி பெற்றிருந்த போதும், பெங்களூர் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட   அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட   தற்போது மைசூர் சாலையில் உள்ள Police Armed Forces Head quarters-ல் அனைவரும் வைக்கப்படுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ் அமைப்புகளைச்  சேர்ந்த தோழர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை மீன­வர்­கள் 25 பேர் இந்­தி­யக் கட­லோ­ரக் காவல் படை­யினரால் கைது!!

இந்­தி­யக் கடல் எல்­லைக்­குள் அத்­து­மீறி மீன்­பி­டி­ யில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் இலங்கை மீன­வர்­கள் 25 பேர் இந்­தி­யக் கட­லோ­ரக் ...

%d bloggers like this: