Home / உலகச் செய்திகள் / பூமியைக் காப்பாற்ற தனது இளமைப் பருவத்தை அர்பணித்த 16 வயது சிறுமி!!

பூமியைக் காப்பாற்ற தனது இளமைப் பருவத்தை அர்பணித்த 16 வயது சிறுமி!!

நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசை ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டாவுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் Greta Thunberg என்ற இந்த சிறுமி பூமி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவது குறித்து ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். இதற்காக தனது பள்ளிப் படிப்பைக் கூட பாதியிலேயே நிறுத்தி விட்ட கிரேட்டா, சுற்றுச்சூழலைக் காப்பாற்ற ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில், நார்வே நாட்டைச் சேர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிரேட்டாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஃப்ரட்டி ஆண்ட்ரே Freddy Andre பூமியைக் காப்பாற்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் கிரேட்டா, நோபல் பரிசுக்கு முழுமையான தகுதி உடையவர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு குறித்த ஏராளமான கூட்டங்களிலும் பங்கேற்று வரும் அவர், தனது இளமைப் பருவத்தை அதற்காகவே அர்பணித்து விட்டார் என ஃப்ரட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

நெதர்லாந்தில் பயணிகள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் -மூவர் பலி! 9 பேர் காயம்!

நெதர்லாந்து உட்ரெச்ட் (Utrecht) நகரில் டிராமில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகள் மீது இனந்தொியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 ...

%d bloggers like this: