Home / கட்டுரைகள் / பூநகரிப் பாதையில் துலங்கும் மர்மங்கள்…

பூநகரிப் பாதையில் துலங்கும் மர்மங்கள்…

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் மர்ம விபத்துக்கள் ஒரு சிறிய ஆய்வு

மேலும் இணைக்கப்பட்டுள்ளது

யாழ் மண்ணில் இருந்து கிட்டத்தட்ட 60 km தொலைவில் பூநகரி அமைந்துள்ளது. இதற்க்கு செல்லவேண்டும் என்றால் நாவற்குழி தனங்கிளப்பு ஊடாக கேரதீவு சங்குப்பிட்டி பாலத்தை கடந்து செல்லவேண்டும்.

கேரதீவு ஐயநார் கோவில் கடந்து கேரதீவு ஐயும் சங்குப்பிட்டிஐயும் இணைக்கும் பாலத்திற்க்கு செல்வதற்க்கு முன் காணப்படும் தரவைப் பகுதியில் அதாவது கடல் ஆரம்பிக்கின்ற பகுதி இந்தப்பகுதியில் சமீபகாலமாக அதாவது இந்த பகுதியில் புதிதாக பாலம் அமைக்கப்பட்ட பின்னர் அடிக்கடி ஒரேஇடத்தில் பல விபத்துக்கள் இடம்பெற்றிருக்கிறது, பல உயிர்களையும் காவுவாங்கியிருக்கிறது.

இப்பொழுதும் இந்த மர்மம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரேஇடத்தில் எதற்க்காக இந்த விபத்து இடம்பெறுகிறது என்பதுதான் மர்மம்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் முழங்காவில் பயணவழிப்பாதையில் பயணிக்கக்கூடிய பேரூந்து குறிப்பிட்ட பகுதியில் தடம்புரண்டுள்ளது. இப்படி விபத்துக்களை பட்டியலிட்டால் பல பக்கங்களைத் தாண்டும். பல பக்கம் என்பது இவ்வாறு ஊடகங்களில் வெளியான செய்தி வெளிவராத விபத்துக்களும் ஏராளம்.

இதற்க்கான காரணம் என்ன என மக்களிடம் வினவியபோது (அது தம்பி இவங்கள் வாகனம் ஓடும்போது நல்ல ரோட்தான கண்ண மூடிக்கொண்டு ஓடுறது அப்படி ஓடினா இப்படித்தான் முட்டிக்கொண்டு சாகணும் )என சாதாரணமாக சொல்லிவிட்டு செல்கிறார்கள். ஆனால் அங்கு ஒரே இடத்தில் விபத்துக்கள் நடப்பதற்க்கு இன்னும் ஒரு காரணமும் சொல்லப்படுகிறது . அந்தப்பகுதியல் வசிக்கக் கூடிய ஒரு அனுபவம் மிக்க மனிதரிடம் சென்று வினவியபோது , அவர் சொன்ன காரணம் அதிர்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது .

அவர் சொன்ன காரணம், கடந்த காலத்தில் ((1983) ம் ஆண்டில் இருந்து இறுதி யுத்தம் முடியும் வரை )
விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இரு பகுதியினரும் எல்லைகளை நிறுவிய பகுதியாகவும் இந்த பகுதியில் போக்குவரத்தில் ஈடுபட்ட ஏராளமான மக்கள் அவலமாக உயிரிழந்ததாகவும் இதனால் அவலமாக உயிரிழந்தவர்களின் ஆவிகள் தான் காரணம் என கூறியுள்ளார். இது உண்மையா அல்லது இதற்க்கு வேறு காரணங்கள் இருக்கிறதா என்பது துலங்காத மர்மமாக இருக்கிறது.

குறிப்பு :-

கடந்த காலப்பகுதியில் 1990 காலப்பகுதியில் யாழில் இருந்து வன்னிக்கு கடல்வழிப்பாதையூடாக (ஆனையிறவுக் கூட்டுப்படைத்தளம் மற்றும் பூநகரி கூட்டுப்படைத்தளம் இரானுவத்திடம் இருந்த காலப்பகுதியில் )

கேரதீவு -சங்குப்பிட்டி கிளாலி ஊரியான் பகுதிகள் ஊடாக மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்ட காலம் அக்காலப்பகுதியில் ஏராளமான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் பூநகரி கூட்டுப்பட்டைத்தளம் ஆனையிறவுக்கூட்டுப் படைத்தளம் விடுதலைப்புலிகள் வசம் வீழ்ந்த பின்னர் தான் அதாவது விடுதலைப்புலிகளின் கடற்ப்புலிகள் வளர்ச்சியின் பின்னர் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இது தவிர 1995 ம் ஆண்டு இரானுவத்தினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் கேரதீவு சங்குப்பிட்டி கடல்வழி வன்னியை இணைக்கும் ஆழம் குறைந்த கடற்ப்பரப்பு என்பதால் இராணுவமும் விடுதலைப்புலிகளும் தீவிரமான முறையில் கண்காணிக்கப்பட்ட ஒரு சூனியப்பிரதேசமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அக்காலப்பகுதியில் அனுமதியின்றி சென்றவர்கள் உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் இவ்வாறு விபத்துக்கள் இடம்பெறுவதால் இந்த இடத்தில அமானுஷ்ய சக்தி இருப்பதாக நினைக்கின்றார்கள். அமெரிக்கா, லண்டன் என பல நாடுகளில் அமானுஷ்ய சக்திகள் வெளிப்பாடுகள் காணப்படுகின்றது. பேய் மலைகள் அப்படி இருக்கையில் ஏன் இந்த பகுதியிலும் இருக்கக் கூடாது என மக்கள் நினைக்கின்றனர். அதையும் தாண்டி இக்காலப்பகுதியில் இப்படி அடிக்கடி ஒரு இடத்தில் நடப்பது துலங்காத மர்மமாகவே இருக்கிறது. மர்மங்கள் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை வாதாடாமல் அந்த வீதிக்கு அதி வேகங்களை கட்டுப்படுத்துவதற்கு முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அந்த பாதையால் பயணம் செய்கின்ற வாகன சாரதிகள் மிக அவதானமாக செல்லவேண்டும் என்பது கட்டாயம் இந்த போக்குவரத்து பாதையை நிர்வகிக்கும் துறை சார்ந்தவர்களின் கவனத்திற்கு…

 

 

About இனியவன்

x

Check Also

Huawei Technologies Lanka Co (Pvt) Ltd. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE      ...

%d bloggers like this: