Home / உள்நாட்டு செய்திகள் / புத்தாண்டு தினத்தில் யாழில் நடந்த துயரச் சம்பவம்!!

புத்தாண்டு தினத்தில் யாழில் நடந்த துயரச் சம்பவம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத்தெருவினைச் சேர்ந்த ம.புவிகரன் வயது 38 என்னும் 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு  கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை

வடக்கு மாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு ...

%d bloggers like this: