Home / உலகச் செய்திகள் / புதிய மின்சார பைக்கை அறிமுகம் செய்த-உசைன் போல்ட்

புதிய மின்சார பைக்கை அறிமுகம் செய்த-உசைன் போல்ட்

ஒலிம்பிக்ஸ் தடகளப் போட்டிகளில் 8 முறை சாம்பியனான உசைன் போல்ட் தமது பெயரால் பல்வேறு மின்சார, மின்னணு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறார்.

பாரீசில் அவர் தமது நிறுவனத் தயாரிப்பான புதிய மின்சார பைக்கை அறிமுகம் செய்தார். கொடியசைத்துத் தொடங்கியதும் போல்ட் அந்த பைக்கில் ஏறி சவாரி செய்தார்.

நீண்ட காலம் உழைக்கும் பேட்டரி, சாலை பாதுகாப்பு, குறைந்த பராமரிப்பு செலவு போன்றவற்றால் எதிர்காலத்தில் இதுபோன்ற மின்சார பைக்குகளின் தேவை அதிகரிக்கக் கூடும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 40 ஆயிரம் மின்சார பைக்குகள் உற்பத்தி செய்ய போல்ட் மொபைலிட்டி உள்ளிட்ட பிரான்ஸ் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

டோக்கியோ நகரில் நிலநடுக்கம்!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள நிலையில், அவரது வருகைக்கு சற்று முன்பு டோக்கியோ நகரில் நிலநடுக்கம் ...

%d bloggers like this: