Home / உள்நாட்டு செய்திகள் / புதிதாக கார் வாங்கிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

புதிதாக கார் வாங்கிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

விடுதியின் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணமானதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் வில்பிரட் நகரை சேர்ந்த 26 வயதுடைய சம்பந்தன் பிரேம்குமார் என்பவரே இவ்வாறு இன்று (01.04.2018) அதிகாலை கண்டி வைத்தியசாலையில் மரணமானார்

தனியார் வங்கியொன்றில் கடமையாற்றும் குறித்த இளைஞன் கார் ஒன்று வாங்கியமைக்கு சக நண்பர்களுக்கு கடந்த 26 ம் திகதி லக்ஷபான நீர்வீழ்ச்சி பகுதியிலுள்ள விடுதியில் விருந்து வழங்கிய சந்தர்ப்பத்தில் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்த நிலையில் லக்ஷபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணமானதாக தெரிவிக்கப்பபிடுகிறது.

மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிஜ் பொலிஸார் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

யாழ் காரைநகர் கும்பநாயகி அம்மன் ஆலயக் கொடியேற்றம் இன்று ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு கும்பநாயகி அம்மன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் ...

%d bloggers like this: