Home / உலகச் செய்திகள் / புக்கர் விருது பெற்ற முதல் அரபிக் மொழி எழுத்தாளர்

புக்கர் விருது பெற்ற முதல் அரபிக் மொழி எழுத்தாளர்

ஓமன் பெண் எழுத்தாளர் சர்வதேச புக்கர் விருதை வென்று, அந்த விருதினை பெற்ற முதல் அரபிக் மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஓமன் நாட்டை சேர்ந்த ஜோகா அல்-ஹரத்தி (Jokha Alharthi) என்ற பெண் எழுத்தாளருக்கு அவரது செலஸ்டியல் பாடீஸ் (Celestial Bodies) என்ற புத்தகத்திற்காக புகழ்பெற்ற சர்வதேச மேன் புக்கர் (Man Booker) விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விருதைப்பெற்ற முதல் அரபிக் எழுத்தாளர் என்ற பெருமையை ஜோகா அல்-ஹத்தி பெற்றுள்ளார்.

லண்டனில் நடந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜோகாவுக்கு 50 ஆயிரம் பவுண்ட் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 44 கோடி ரூபாயாகும். பரிசு தொகையில் பாதியை அந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவருக்கு வழங்க உள்ளதாக ஜோகா அறிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கினர்.

பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி ...

%d bloggers like this: