Home / உலகச் செய்திகள் / புகலிடம் கோரிய சவுதி அரேபிய பெண்ணை பொறுப்பேற்ற (UNHCR)

புகலிடம் கோரிய சவுதி அரேபிய பெண்ணை பொறுப்பேற்ற (UNHCR)

தாய்லாந்தில் புகலிடம் கோரிய சவுதி அரேபிய பெண்ணை UNHCR நேற்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சவுதி அரேபியாவிலிருந்து தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் தாய்லாந்திற்கு வந்ததாக கூறப்படும் இளம் பெண்ணை நாடுகடத்த போவதில்லை எனவும், அவர் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தாய்லாந்தின் குடியுரிமைத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையிலேயே UNHCR பொறுப்பேற்றுள்ளது.

அத்தோடு பதினெட்டு வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தனது குடும்பத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்ததாகவும் ஆனால் தாய்லாந்தில் தரையிறங்கியதும் சவுதி அதிகாரிகள் தனது கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும், பாங்கொக்கில் உள்ள சவுதி தூதரகம், அந்த பெண்ணிடம் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான பயணச் சீட்டு இல்லை என்ற காரணத்திற்காகவே அவரது கடவுசீட்டினை பறி முதல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கடவுச்சீட்டு குறித்த பெண்ணிடமே காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள குறித்த பெண் சவுதி அரேபியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டால் எனது குடும்பத்தால் நான் கொல்லப்படுவேன் என அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னிடம் அவுஸ்ரேலிய விசா இருப்பதாக கூறிய அல்-குனன் சுவர்ணபூமி விமானநிலையத்தில் அவுஸ்ரேலியாவிற்கு செல்லும் விமானத்தை பிடிக்க முயன்ற போது தன்னைச் சந்தித்த சவுதி அதிகாரி தனது கடவுச்சீட்டினை பறி முதல் செய்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

ராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர  குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே ...

%d bloggers like this: