Home / இந்திய செய்திகள் / பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்த தமிழக அரசு மாற்றத்தை உண்டாக்கிய மக்கள்

பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்த தமிழக அரசு மாற்றத்தை உண்டாக்கிய மக்கள்

2019 புத்தாண்டு தினத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கிறது தமிழக அரசு இதனால் நிறைய மக்கள் நன்மை அடைகிறார்கள். அடையவும்  இருக்கிறார்கள்

இவ்வாறு இருக்க அரசு விதித்த தடையினால் மதுரை அருகே கடச்சனேந்தல் பகுதியில் அமைந்துள்ள ஒர் அழகிய குடிலில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மனவளர்ச்சியில் மாற்றம் கொண்ட பெண்கள் காகிதப்பைகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மதுரையில் இயங்கிவரும் பூமிகா மையத்தை சேர்ந்த இவர்கள் பழைய நாளிதழ்களை, பயன்படுத்தும் பைகளாக மாற்றுகின்றனர்.

அதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும், மனதளவில் மாற்றம் கொண்ட இந்த பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் சமூகம் சார்ந்த இந்தப் பணியை மேற்கொள்வதாக கூறுகிறார் நிறுவனர் அந்த நிறுவனத்தின் ஜீனா.

மனவளர்ச்சியில் மாற்றம் கொண்ட பெண்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆதரவுக் கரமாக இந்த மையம் செயல்பட்டு வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் காகிதப்பைகள் மட்டுமல்லாமல் இயற்கையில் இருந்து கிடைக்கும் பொருட்களின் மூலம் துணிகளுக்கு இயற்கை சாயமேற்றும் பணியும் இங்கு நடைபெறுகிறது.

இதேவேளையில் இந்த பெண்களின் வாழ்விலும் ஒரு மாற்றத்தை உண்டாக்க சமூகத்தின் அரவணைப்பு தேவை என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

பாரதிராஜா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை!!

இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பேசியதற்காக, இயக்குநர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உயர் ...

%d bloggers like this: