Home / உலகச் செய்திகள் / பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொடுப்போருக்கு மெட்ரோவில் இலவச பயணம்..!!

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொடுப்போருக்கு மெட்ரோவில் இலவச பயணம்..!!

இத்தாலியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொடுப்போருக்கு மெட்ரோவில் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பினை அந்நாட்டு போக்குவரத்து துறை வழங்கி வருகின்றது.

சுற்றுலா தலங்கள் நிறைந்த இத்தாலியில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் நாள் கணக்கில் தெருக்களில் தேக்கப்படுவதை தவிர்க்க அந்நாட்டின் சுற்றுசூழல் துறை, போக்குவரத்து துறையுடன் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, சாலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை, சேகரித்து மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தில் கொண்டு சேர்ப்போருக்கு இலவச மெட்ரோ பயண டிக்கெட் வழங்கப்படுகிறது. அந்தவகையில், ரோம் நகரில் உள்ள சான் ஜியோவானி மெட்ரோ நிலையம் நோக்கி படை எடுக்கும் மக்கள், MyCicero என்ற செயலி ‘பார்கோடை’ ஸ்கேன் செய்து, பிளாஸ்டிக் பாட்டில்களை அங்கு நிறுவப்பட்டுள்ள மறுசுழற்சி இயந்திரத்துக்குள் ஒவ்வொன்றாக செலுத்துகின்றனர்.

இதற்கு இணையாக அவர்களது கிரெடிட் கார்டு கணக்கில் பணம் வந்து சேர்வதால், அதனை பயன்படுத்தி மெட்ரோ பயணத்துக்காக டிஜிட்டல் டிக்கெட்டை பெற்று செல்கின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் ...

%d bloggers like this: