Home / உலகச் செய்திகள் / பிரேசில் நாட்டில் துப்பாக்கிச் சண்டையில் 13 பேர் பலி

பிரேசில் நாட்டில் துப்பாக்கிச் சண்டையில் 13 பேர் பலி

பிரேசில் நாட்டில் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ரியோ டி ஜெனிரோ நகரில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், பதுக்கி வைத்திருப்பதாகவும் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலில் குறிப்பிட்ட பகுதியை சுற்றி வளைத்த போது போதை கடத்தல் கும்பல் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து போலீசார் திருப்பிச் சுட்டனர்.

பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின் போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்த 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அத்தோடு குறிப்பிட்ட கட்டடத்தில் இருந்து ஏராளமான போதைப் பொருள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் என பறிமுதல் செய்யப்பட்டன.

 

About அகமுகிலன்

x

Check Also

மிகப் பழமையான மசூதியின் சிதிலங்கள் கண்டுபிடிப்பு!!

இஸ்ரேலில் மிகப் பழமையான மசூதியின் சிதிலங்களை நெகவ் பாலைவனத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ரஹத் நகருக்கு அருகே உள்ள நெகவ் ...

%d bloggers like this: