Home / சினிமா செய்திகள் / பிரியங்கா சோப்ராவுக்கு பதில் மம்தா முகத்தை இணைத்து மீம்ஸ் போட்ட பெண் கைது!!

பிரியங்கா சோப்ராவுக்கு பதில் மம்தா முகத்தை இணைத்து மீம்ஸ் போட்ட பெண் கைது!!

கோல்கட்டா: கேலிக்கு உள்ளான பிரியங்கா சோப்ரா உடையுடன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை இணைத்து வெளியிட்ட பா.ஜ., இளைஞரணியை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.

நியூயார்க்கில் நடைபெற்ற வித்தியாச உடை அணியும், ‘மெட்காலா’ நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அதில் அவர் அணிந்த உடையும், முடி அலங்காரமும் நெட்டிசன்கள் மத்தியில் கேலிக்கு உள்ளானது.

இந்த நிலையில், மெட்காலாவில், பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த உடையில், அவருக்கு பதில், மேற்குவங்க முதல்வர் மம்தாவின் முகத்தை மார்பிங் செய்து, பா.ஜ., இளைஞரணியை சேர்ந்த பிரியங்கா சர்மா என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இப்பதிவுக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இது தொடர்பாக திரிணாமுல் கட்சியை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரை அடுத்து, ஹவுரா போலீசார் பிரியங்கா சர்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

 

About அகமுகிலன்

x

Check Also

மீண்டும் திரைப்படங்களில் குஷ்பூ!!

நடிகை குஷ்பூ, அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்த பின்னர், திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். திரைப்படங்களில் நடிக்கலாமா வேண்டாமா என ...

%d bloggers like this: