Home / உலகச் செய்திகள் / பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படுமா?

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படுமா?

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடையை, எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற புலம்பெயர் அமைப்பு விண்ணப்பம் செய்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் பிரித்தானிய உள்துறை அமைச்சின் முடிவுக்கே இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை பிரித்தானியா கடந்த 2001ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தியுள்ளது. இருப்பினும் ஆயுதப்போராட்டம் இலங்கையில் மௌனிக்கப்பட்டு தற்போது 10 வருடங்கள் கடந்துள்ளன.

அந்த வகையில் இது தொடர்பாக உள்துறை அமைச்சுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளது.

இதையடுத்து சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரித்தானிய உள்துறை அமைச்சு மறுப்பு அறிக்கை ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தது.

இந்த நிலையில் பிரித்தானிய உள்துறை அமைச்சின் குறித்த அறிவிக்கையை எதிர்த்து தற்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விண்ணப்பம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

டோக்கியோ நகரில் நிலநடுக்கம்!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள நிலையில், அவரது வருகைக்கு சற்று முன்பு டோக்கியோ நகரில் நிலநடுக்கம் ...

%d bloggers like this: