Home / உலகச் செய்திகள் / பிரான்ஸ் உட்பட 9 நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தடைசெய்த மலேசியா!

பிரான்ஸ் உட்பட 9 நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தடைசெய்த மலேசியா!

பிரான்ஸ்,பிரித்தானியா, அமெரிக்கா, உட்பட 9 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மலேசியாவிற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ்,பிரித்தானியா, அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின், இத்தாலி, சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் வங்கதேச ஆகிய நாடுகளை தடைசெய்யப்பட்ட பயணிகள் பட்டியலில் சேர்த்துள்ளது மலேசியா.
கொரோனா வைரஸ் தொற்றை குறைக்கும் முயற்சியில் செப்டம்பர் 7ம் திகதி முதல் இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை செய்வதாக மலேசிய அரசாங்கம் கடத்த (01/09/2020) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இந்த தடையில் இப்போது 1,50,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ள அனைத்து நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை நிலவரப்படி மலேசியாவில் வெறும் 9,374 கொரோனா தொற்றுக்கள் மற்றும் 128 இறப்புகள் பதிவாகியுள்ளன.
மார்ச் மாதத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகப் பயணிகள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது மலேசியா.
சமீபத்தில் நாட்டிற்கு திரும்பி வருபவர்கள் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் மத்தியில் கொரோனா தொற்று பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நுழைவு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
அதிக ஆபத்து என்று கருதப்படும் நாடுகளை தடைசெய்யப்பட்ட பயணிகள் பட்டியலில் சேர்ப்போம் என்று Ismail Sabri Yaakob குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தடையில் நிரந்தர குடியிருப்பாளர்கள், வெளிநாட்டவர்கள், மாணவர்கள் மற்றும் துணை விசாக்களில் இருப்பவர்கள் மற்றும் மலேசியா இரண்டாவது சொந்த நாடு திட்டத்தில் இருப்பவர்கள் ஆகியோர் அடங்குவதாக Ismail Sabri Yaakob முன்பு கூறியிருந்தார்.

About VITHUSHA

x

Check Also

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80 இலட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று மாத்திரம் அங்கு 45 ஆயிரத்து 791 பேருக்கு ...