Home / உலகச் செய்திகள் / பிரான்சில் திரைப்படப்பாணியில் அரங்கேறிய ஆட்கடத்தல்!

பிரான்சில் திரைப்படப்பாணியில் அரங்கேறிய ஆட்கடத்தல்!

பேருந்து ஒன்றை தாக்கிய சில நபர்கள், அதில் பயணித்த பயணி ஒருவர் கடத்தியுள்ளனர்.

Val-de-Marne மாவட்டத்துக்குள் பயணிக்கும் Kéolis நிறுவனத்தின் பேருந்து ஒன்று (03/09/2020) வியாழக்கிழமை Orly நகரில் பயணித்துக்கொண்டிருந்தது.

இரவு 7:30 மணி அளவில் rue Paul Vaillant Couturier மற்றும் avenue de la Victoire வீதிகளுக்கிடையே பேருந்து பயணித்துக்கொண்டிருக்கும் போது, பேருந்தை சில நபர்கள் சுற்றி வளைத்தனர்.

முகக்கவசம் அணிந்த அவர்கள், பேருந்தை பின்னால் இருந்து தாக்கினர். சாரதி பேருந்தை நிறுத்தியதும் பேருந்துக்குள் நுழைந்து பின் இருக்கையில் இருந்துபயணித்துக்கொண்டிருந்த நால்வரில் ஒருவரை வலுக்கட்டாயமாக தூக்கி வெளியே இழுந்து வந்தனர்.

பின்னர் அவரை தங்களது வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

*விசாரணைகளில், பேருந்து சாரதி முதலில் பேருந்தை நிறுத்தாமல் பயணித்ததாகவும், பின்னர் சமிக்ஞை விளக்கில் நிறுத்திய போது பேருந்தை அவர்கள் பின்னால் இருந்து தாக்கியதாகவும் அறிய முடிகிறது.

காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About VITHUSHA

x

Check Also

பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் மேலதிக தகவல்

பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் ...