Home / உலகச் செய்திகள் / பிரான்சின் Musee Grevin அருங்காட்சியகம் புதிய வடிவமைப்புடன் இன்று திறப்பு!

பிரான்சின் Musee Grevin அருங்காட்சியகம் புதிய வடிவமைப்புடன் இன்று திறப்பு!

பிரான்சின் Musee Grevin அருங்காட்சியகம் பெரும் மாற்றங்கள் மற்றும் புதிய வடிவமைப்புடன் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

பாரிசின் Grands Boulevards-யில் அமைந்துள்ள Musee Grevin அருங்காட்சியகம், 1882ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதி உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் 137 ஆண்டுகளைக் கடந்து மக்களைக் மனதை கவர்ந்து வருகிறது.

பெரும் திருத்த வேலைகளுக்காக மூடப்பட்ட Musee Grevin அருங்காட்சியம் தற்போது மீண்டும் திறக்கப்பட உள்ளது. மிகவும் பிரபலமான நட்சத்திரங்களின் தத்ரூபமான மெழுகு பொம்மைகளைக் கொண்ட Musee Grevin-யில் மேலும் புதிதாக 30 பிரபலங்களின் பிரதிமைகள் கொண்டு இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த பிரதிமைகள் வரும் 14ஆம் திகதி முதல் மக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்றும், புதிய வடிவமைப்புடன் தயாராகியுள்ள இந்த அருங்காட்சியகம் சனிக்கிழமையான இன்று திறக்கப்பட உள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

தெக்ரான் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரானுக்கு கண்டன கடிதம்

பாகிஸ்தானில் பேருந்து பயணிகள் 14 பேரை சுட்டுக்கொன்ற தெக்ரான் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரானுக்கு அந்நாட்டு அரசு ...

%d bloggers like this: