Home / சினிமா செய்திகள் / பிரபல நடிகை ICU வில் அனுமதி

பிரபல நடிகை ICU வில் அனுமதி

பிரபல இந்தி நடிகை ஷரத்தா கபூர். இவர் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவரால் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஷரத்தா கபூர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

About இனியவன்

x

Check Also

ரஜினிகாந் பற்றிய 8 சுவாரஸ்ய தகவல்கள்

நடிகர் ரஜினிகாந்தின் 68-ஆவது பிறந்தநாள் இன்று (புதன்கிழமை) அவர் குறித்த சுவாரஸ்யமான 68 தகவல்கள் இவை. 1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ...

%d bloggers like this: