Home / சினிமா செய்திகள் / பிரபல தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி காலமானார்.

பிரபல தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி காலமானார்.

பிரபல தயாரிப்பாளரும் விஜயா வாகினி புரொடக்சன்ஸ் நிர்வாகியுமான B.வெங்கட்ராம ரெட்டி காலமானார்.

அவருக்கு வயது 75. தமிழ் திரையுலகில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா வாகினி புரொடக்சன்ஸ் நிறுவனத்தை, பி.நாகிரெட்டி மறைவுக்குப் பின் அவரது இளைய மகன் பி.வெங்கட்ராமரெட்டி நிர்வகித்து வந்தார். விஷால் நடித்த தாமிரபரணி, தனுஷ் நடித்த படிக்காதவன், வேங்கை, அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த பைரவா ஆகிய படங்கள் இவரால் தயாரிக்கப்பட்டன.

விஜய்சேதுபதி இரட்டை வேடங்களில் நடிக்கும் சங்கத் தமிழன் என்ற படத்தை வெங்கட்ராம ரெட்டி தயாரித்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் பிற்பகல் ஒரு மணியளவில் வெங்கட்ராமரெட்டி காலமானார். அவருக்கு பாரதிரெட்டி என்ற மனைவியும் ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். இவரது இறுதி சடங்கு நெசப்பாக்கத்தில் நாளை காலை 7.30 முதல் 9 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தளபதி 63 படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை!!

அட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் இளம் நாயகிகள் பலரும் நடித்து ...

%d bloggers like this: