Home / தொழில்நுட்ப செய்திகள் / பிரபல சமூக ஊடகங்களின் சேவைகள் செயலிழப்பு!

பிரபல சமூக ஊடகங்களின் சேவைகள் செயலிழப்பு!

பல்வேறு நாடுகளிலும் பிரபல சமூக ஊடகங்களான FACEBOOK – WHATSAPP – INSTAGRAM உள்ளிட்டவைகளின் சேவைகள் செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், சுமார் மூன்று மணி நேர செயலிழப்புக்கு பின்னர், மீண்டும் குறித்த தளங்கள் சரிசெய்யப்பட்டு வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், FACEBOOK தளத்தை பயன்படுத்த முடியவில்லை என 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் FACEBOOK தளம் செயலிழந்திருந்த நிலையில், அதன் சேவைகளை 24 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்த முடியாமல் இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE 

About அகமுகிலன்

x

Check Also

TikTok அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்ய தடை!!

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட TikTok அப்பிளிக்கேஷன் ஆனது இன்று உலகம் முழுவதும் பிரபல்யமாகி வருகின்றது. இதுவரை 200 மில்லியனிற்கும் அதிகமான ...

%d bloggers like this: