Home / உள்நாட்டு செய்திகள் / பிரபல இயக்குநர் மகேந்திரன் இன்று காலை காலமானார்.

பிரபல இயக்குநர் மகேந்திரன் இன்று காலை காலமானார்.

பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் (79). சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாள்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் என்ற திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவர் ரஜினியை வைத்து முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, ரஜினியின் பேட்ட, விஜய்சேதுபதியின் சீதக்காதி, அதர்வாவின் பூமராங் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார்.

மகேந்திரனின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளின் தொழிலை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை ...

%d bloggers like this: