Home / உள்நாட்டு செய்திகள் / பிரதமர் மஹிந்தவிற்கு இரு நாடுகள் வாழ்த்து! 

பிரதமர் மஹிந்தவிற்கு இரு நாடுகள் வாழ்த்து! 

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஓமான் அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. பிரதமரின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஓமான் அரசாங்கம் முழு ஆதரவை வழங்கும் என இலங்கையில் அமைந்துள்ள ஓமான் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதனுடன் இரு நாடுகளின் உறவுகளை மேலும் விரிவுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, பாலஸ்தீனிய அரசாங்கமும் அறிக்கையொன்றை வெளியிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இலங்கையின் சமாதானம், செழிப்பு மற்றும் அபிவிருத்திக்காக ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About இனியவன்

x

Check Also

ஜனாதிபதி ஆணைக்குழு மீது முழுமையான நம்பிக்கை உண்டு – பேராயர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை சாட்சியமளித்துள்ளார். ...

%d bloggers like this: