Home / உள்நாட்டு செய்திகள் / பிரதமர் மஹிந்தவின் திடீர் ட்விட்டர் பதிவு

பிரதமர் மஹிந்தவின் திடீர் ட்விட்டர் பதிவு

பொதுத் தேர்தல் மூலம் நிலையான நாட்டை கட்டியெழுப்ப பொதுமக்கள் வாய்ப்பளித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் பொதுமக்களின் நிலைப்பாடுகள் கேட்டறியப்பட வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பௌர்ணமி தினத்திற்கு முன்பாக அரசாங்கத்தை வெளியேற்றுவதாக கூறியிருந்தோம். அந்த இரண்டாவது பௌர்ணமிக்கு முன்னதாக அரசாங்கம் வெளியேற்றப்பட்டுள்ளது. நாடு தொடர்ந்தும் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி தமக்குள் எழுந்தது.

இதனை கருத்திற் கொண்டே தாம் செயற்பாடுகளை முன்னெடுத்ததாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

கொழும்பு, ஜிந்துப்பிட்டிய பகுதியில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த ...

%d bloggers like this: