Home / உள்நாட்டு செய்திகள் / பிரதமருக்கு எதிராக முறைப்பாடு செய்த தேரர்!!

பிரதமருக்கு எதிராக முறைப்பாடு செய்த தேரர்!!

தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் ரஜவத்தே வப்ப தேரரால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு செவ்வாய்க்கிழமை அன்று பொலிஸ் தலைமையகத்தில் செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தெரிந்திருந்தும் அது குறித்து நடவடிக்கை எடுக்காமை, அரசாங்கம் என்ற ரீதியில் தமது பொறுப்புகளிலிருந்த விலகியிருந்தமை உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து பிரதமர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்டவர்களுக்கு முன்னரே தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்க தவறியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இவ்வாறு ஒரு தாக்குதல் இடம்பெறப்போவதாக தனக்கு முன்கூட்டியே எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: