Home / உலகச் செய்திகள் / பிரசவம் செய்துகொள்ள மருத்துவமனை வரை சைக்கிளில் சென்ற பெண் போக்குவரத்து அமைச்சர்

பிரசவம் செய்துகொள்ள மருத்துவமனை வரை சைக்கிளில் சென்ற பெண் போக்குவரத்து அமைச்சர்

நியூசிலாந்து நாட்டு அமைச்சர் அனி ஜெண்டேர் தனது பிரசவத்துக்கு சைக்கிளை தானே ஓட்டிக் கொண்டு மருத்துவமனை சென்றுள்ளார்.

நியூசிலாந்து அமைச்சரவையில் பெண்கள் நலத்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார் அனி ஜெண்டேர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் தனது பிரசவத்திற்காக 1 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு தானே சைக்கிளில் சென்றுள்ளார்.

இதுகுறித்து அனி ஜெண்டேர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “எங்களது காரில் உதவியாளர்களுக்கான போதிய இடம் இல்லாததால் பிரசவத்திற்காக எனது கணவர் மற்றும் நானும் சைக்கிளிலேயெ பயணித்தோம். இது மிகச் சிறந்த மனநிலையை உண்டாக்கியது” என தெரிவித்துள்ளார்.

About இனியவன்

x

Check Also

தெக்ரான் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரானுக்கு கண்டன கடிதம்

பாகிஸ்தானில் பேருந்து பயணிகள் 14 பேரை சுட்டுக்கொன்ற தெக்ரான் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரானுக்கு அந்நாட்டு அரசு ...

%d bloggers like this: