Home / சினிமா செய்திகள் / பிக்பாஸ் 3 கமல் தான் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிக்பாஸ் 3 கமல் தான் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் டிவி.,யின் நட்சத்திர நிகழ்ச்சியான பிக்பாசின் 3வது சீசன் அடுத்த மாதம் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. முதல் இரண்டு நிகழ்ச்சிகளை பிக்பாசாக இருந்து நடத்திய கமல்ஹாசனே, மூன்றாவது முறையாகவும் பிக்பாசாக இருக்கப் போகிறார். இதனை நேற்று வெளியிட்ட புரமோ வீடியோவின் மூலம் விஜய் டி.வி., அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்த கமலைத் தவிர வேறு யாரையும் சேனல் பரிசீலிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. 2வது சீசன் முடிந்த உடனேயே 3வது சீசனுக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டதாக சேனல் தரப்பு செய்திகள் தெரிவிக்கிறது. 3வது சீசனில் கமலின் சம்பளமும் கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கமல் தீவிர அரசியலில் இறங்கி இருப்பதாலும், சமீபத்தில் அவரின் இந்து தீவிரவாதம் பற்றிய சர்சை பேச்சால் ஏற்பட்டுள்ள நெருக்கடியாலும் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால் சேனலுக்கு மறைமுக நெருக்கடிகள் கொடுக்கப்படும் என்றும், இதனால் சேனல் கொஞ்சம் தயக்கம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகின, என்றாலும் “அரசியல் சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் கமல்தான் பிக்பாஸ்” என்று சேனல் வட்டாரம் அடித்துச் சொல்கிறது.

About இனியவன்

x

Check Also

தளபதி 63 படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை!!

அட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் இளம் நாயகிகள் பலரும் நடித்து ...

%d bloggers like this: