Home / சினிமா செய்திகள் / பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் பிரபலங்களின் பட்டியல்

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் பிரபலங்களின் பட்டியல்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. 3-வது முறையாக நடிகர் கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சிக்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.


கடந்த இரண்டு சீசன்கள் போல் அல்லாமல் இந்த முறை பிக்பாஸ் டாஸ்க்குகள் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றாற் போல பிக்பாஸ் வீட்டின் அமைப்பும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்தமுறை பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

power star | நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்
கண்ணா லட்டு தின்ன ஆசையா, கோலி சோடா உள்ளிட்ட படங்களில் நடித்த பவர் ஸ்டார், படங்களில் அதிகம் நடிக்காமல் அரசியலில் களமிறங்கினார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் இந்தியக் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசனில் இவரை அழைத்த விஜய் டிவி நிர்வாகம் தற்போது இந்த சீசனில் இவரை களமிறக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடன இயக்குநராக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றிய சாண்டி. தற்போது திரைப்படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவரும் இம்முறை பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். விஸ்வாசம் படத்திலும் மருத்துவராக நடித்துள்ளார். இவரது பெயரும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வோரின் பட்டியலில் அடிபடுகிறது.

நடிகை மதுமிதா
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மதுமிதா. அந்தப் படத்தை அடுத்து மிரட்டல், அட்டக்கத்தி, கண்பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்துவரும் மதுமிதாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றிருக்கும் நிலையில், இவரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க இருக்கிறார்.

கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற ஆனந்த் வைத்தியநாதனுக்கு பதிலாக இந்த முறை பாடகரும், நடிகருமான மோகன் வைத்யா பங்கேற்க உள்ளார்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். தொடர்ந்து விசில், நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சமீபகாலமாக படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். அதனால் இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இயக்குநர் சேரன்
பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களை இயக்கிய சேரன் இறுதியாக திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி நிர்வாகம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிக்பாஸ் போட்டியாளர் லிஸ்ட் 

பாத்திமா பாபு
பவர் ஸ்டார் சீனிவாசன்
சேரன்
ஷெரீன்
சரவணன்
மதுமிதா
மோகன் வைத்தியா
சாந்தினி
சாண்டி
சாக்‌ஷி அகர்வால்
அபிராமா
மலேஷியன் மாடல்
இலங்கை மாடல்

About இனியவன்

x

Check Also

“பிகில்” போஸ்டர் காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடித்து உருவாகியுள்ள படம் பிகில். அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ...

%d bloggers like this: