Home / சினிமா செய்திகள் / “பிகில்” போஸ்டர் காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

“பிகில்” போஸ்டர் காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடித்து உருவாகியுள்ள படம் பிகில். அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் விஜய் பேசியது அவருடைய ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு உக்கடம் புதிய மீன் மார்க்கெட்டை சேர்ந்த இறைச்சி வியாபாரி கோபால் என்பவர் கையில் பிகில் பட போஸ்டருடன் வந்திருந்தார்.

Image result for “பிகில்” போஸ்டர்

அவர் திடீரென்று விஜய் படத்தின் போஸ்டரை ஆக்ரஷோமாக கிழித்து எறிந்தார். இதனையடுத்து அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து கலெகடரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், “நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அதில், மீன், கோழி, ஆட்டு இறைச்சியை வெட்டும் கட்டை மற்றும் கத்தி மீது நடிகர் விஜய் செருப்பு அணிந்த கால் வைத்திருப்பது போன்று உள்ளது.

இது இறைச்சி வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இறைச்சி வியாபாரிகளை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.

எனவே சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சமுதாயத்துக்கு இருக்கும் பார்வை முற்றிலும் மாறிவிடும்-சசிகுமார்

சமுதாய பார்வைகொண்ட திரைப்படங்களை எடுத்துவரும் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி மீண்டும் நடிகர் சசிகுமாரை வைத்து நாடோடிகள் 2 படத்தை இயக்கி ...

%d bloggers like this: