Home / உள்நாட்டு செய்திகள் / பால்மாவில் கலப்படம் இருப்பதை நான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன்-புத்திக பத்திரன

பால்மாவில் கலப்படம் இருப்பதை நான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன்-புத்திக பத்திரன

புலிகளின் யுத்தத்தைவிட புகையிலை நிறுவனங்களே பயங்கரவாதிகளாகும் என கைத்தொழில் வாணிபம் மற்றும் கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இந்த வருடத்துக்கான வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் நான்காவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படம் இருப்பதை நான் ஆதரத்துடன் நிரூபிப்பேன். இன்று சுப்பர் மார்க்கட்களில் உள்நாட்டு பால்மாக்களை மறைத்துவைத்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களை மாத்திரம் மக்களின் நுகர்வோரின் பார்வைக்கு காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

இதே போன்று சிறுவர்களின் இனிப்புப்பொருள்கள் வைத்திருக்கும் இடத்தில் தான் சிகரட் பெட்டிகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகளை நிறுத்த எமது நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

அதேவேளை, புகையிலை பொருட்களால் நாளொன்றுக்கு 55 பேர் மரணிக்கின்றனர். ஆனால் யுத்தத்தின் போது நாளொன்றில் சுமார் 40 பேரே மரணித்துள்ளனர். அதனால் விடுதலை புலிகளின் யுத்தத்தைவிட புகையிலை நிறுவனங்களே பயங்கரவாதிகளாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு!!

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். 38 வயதான குறித்த நபர் வெல்லம்பிட்டி ...

%d bloggers like this: