Home / இந்திய செய்திகள் / பாரதிராஜா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை!!

பாரதிராஜா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை!!

இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பேசியதற்காக, இயக்குநர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு கோவையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியது தொடர்பாக  இயக்குனர் அமீர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, தமிழகத்தில் மாவோயிஸ்டு அல்லது நக்ஸலைட்டு அமைப்புகள் உருவாகும் நிலையை ஏற்படுத்திவிட வேண்டாம் என பேசியதாக கூறப்படுகின்றது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் மீதான விசாரணைக்கு தடைகோரி பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் முரளி தாக்கல் செய்த அறிக்கையில், நாராயணன் புகார் மீது விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர வடபழனி உள்ளிட்ட காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, பாரதிராஜாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன்பின்னர் திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணைக்கு தடை விதித்த நீதிபதி, ஆய்வாளரும், புகார்தாரர் நாராயணனும் 6 வாரத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழப்பு!!

பீகாரில் மர்ம நோயால் தாக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் முசாபர்பூர் ...

%d bloggers like this: